திருவோணம் !
ராதேக்ருஷ்ணா
திருவோணம் . . .
நீ பிறந்த திருவோணம் !
வாமனா . . .
இன்று நீ பிறந்த திருவோணம் !
கச்யபருக்கும் அதிதி தேவிக்கும்
நீ பிறந்த திருவோணம் !
மஹாபலிக்கு அனுக்ரஹம் செய்ய
நீ பிறந்த திருவோணம் !
இந்திரனுக்கு சொர்க்கம் தர
நீ பிறந்த திருவோணம் !
மூவடி நிலம் யாசகம் கேட்க
நீ பிறந்த திருவோணம் !
பால ப்ரஹ்மசாரியாய் வர
நீ பிறந்த திருவோணம் !
உலகையெல்லாம் அளக்க
நீ பிறந்த திருவோணம் !
வாமனா . . .
நீ நன்றாயிருக்கவேண்டும் !
உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
அன்று இவ்வுலகம் அளந்தாய்
அடி போற்றி !
இன்று எங்களை ஆட்கொண்டாய்
கருணை போற்றி !
அன்று இவ்வுலகைப் பெற்றாய்
குணம் போற்றி !
இன்று எங்களை வாழவைக்கிறாய்
பலம் போற்றி !
அன்று மஹாபலியைக் காத்தாய்
சத்தியம் போற்றி !
இன்று எங்களைக் காக்கின்றாய்
நிதானம் போற்றி !
அன்று சொர்க்கம் மீட்டாய்
பொறுப்பு போற்றி !
இன்று எங்களை மீட்கின்றாய்
வாத்சல்யம் போற்றி !
அன்று கங்கையைத் தந்தாய்
லீலை போற்றி !
இன்று திருவோணம் தந்தாய்
மஹத்துவம் போற்றி !
வாமனா . . . திருவிக்கிரமா . . .
உலகளந்தோனே . . .
உன் பெருமை பேச என்னால் முடியுமோ !
ஏதோ உன் மீதுள்ள
ஆசையால்,
ஆழ்வார்கள் சொன்ன
வார்த்தைகளால்,
அசடாய் பேசிவிட்டேன் . . .
இந்த அசடையும்,
இதோடு இருக்கும் கூட்டத்தையும்
என்றும் ரக்ஷிப்பாய் ! ! !
நாங்கள் அஹம்பாவிகள் !
நீ தான் எங்களை வழிபடுத்தவேண்டும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக