அகலாக,திரியாக,ஜோதியாக!
ராதேக்ருஷ்ணா
தீபாவளி ! ! !
அன்பே அகலாக,
சிரத்தையே திரியாக,
பக்தியே ஜோதியாக....
குரு க்ருபையே அகலாக,
நாம ஜபமே திரியாக,
க்ருஷ்ணனே ஜோதியாக . . .
பாகவதமே அகலாக,
வேத வ்யாசரே திரியாக,
சுகப்ரும்மமே ஜோதியாக . . .
வால்மீகியே அகலாக,
ராமாயணமே திரியாக,
ராமனே ஜோதியாக . . .
ப்ருந்தாவனமே அகலாக,
ப்ரேமையே திரியாக,
கோபிகைகளே ஜோதியாக . . .
ஸ்வாமி நம்மாழ்வாரே அகலாக,
மற்ற ஆழ்வாரெல்லாம் திரியாக,
ஆண்டாளே ஜோதியாக . . .
ஸ்ரீவைஷ்ணவம் அகலாக,
108 திவ்ய தேசமும் திரியாக,
ஸ்வாமி ராமானுஜரே ஜோதியாக . . .
கலியுகம் அகலாக,
ஹரே ராம ஹரே க்ருஷ்ண திரியாக,
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரே ஜோதியாக . . .
பாரதமே அகலாக,
இந்து தர்மமே திரியாக,
வந்தே மாதரமே ஜோதியாக . . .
ராதேக்ருஷ்ணா சத் சங்கமே அகலாக,
கோபாலவல்லியே திரியாக,
ராதேக்ருஷ்ணா நாமமே ஜோதியாக . . .
இந்த தீபாவளிக்கு
என் க்ருஷ்ணனுக்கு இத்தனை
விளக்கேற்றினேன் அடியேன் ! ! !
இந்த விளக்குகளின் ஒளியில்,
அஞ்ஞான இருள் நீங்கட்டும். . .
நம் கண்ணன் நம்மைக் காப்பான் !
நம் இந்து தர்மம் நம்மைக் காக்கும் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக