போனால் போவேன் !
ராதேக்ருஷ்ணா
அழியவேண்டும் !
நான் அழிய வேண்டும் !
நான் அழிந்தால் எல்லாம் சரியாகும் !
நான் அழிந்தால் ஒரு பிரச்சனையில்லை !
நான் அழிந்தால் ஒருவருக்கும் கவலையில்லை !
நான் அழிந்தால் நிம்மதி தானாய் வரும் !
நான் அழிந்தால் சமாதானம் நிலவும் !
நான் அழிந்தால் வழி பல கிடைக்கும் !
நான் அழிந்தால் தடைகள் எல்லாம் விலகும் !
நான் அழிந்தால் நன்மைகள் வந்து சேரும் !
நான் அழிந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் !
நான் அழிந்தால் தோல்வி என்பதே இல்லை !
நான் அழிந்தால் உலகில் எதிரிகளே கிடையாது !
நான் அழிந்தால் ஏமாற்றம் துளியும் இல்லை !
நான் அழிந்தால் அன்பு வளர்ந்து கொண்டேயிருக்கும் !
நான் அழிவதால் ஒருவருக்கும்
ஒரு நஷ்டமில்லை !
நான் இருப்பதால் யாருக்கும்
ஒரு லாபமுமில்லை !
நான் . . . நான் . . . நான் . . .
இந்த " நான் " என்னும்
அகந்தை முற்றிலும் அழிந்தால்
எத்தனை ஆனந்தம் !
யாரால் உள்ளபடி அந்த
ஆனந்தத்தைச் சொல்லமுடியும் !
நான் அழிந்தால் அமைதி
நம்மைத் தேடி வரும் !
நான் அழிந்தால் செல்வம்
நம்மிடம் அடைக்கலம் கேட்கும் !
நான் அழிந்தால் உலகமே
நம் வார்த்தைக்குக் கட்டுப்படும் !
கனகதாசர் சொன்னார் . . .
"நான் போனால் போவேன் ! "
அதாவது " நான் " என்னும் அகந்தை
என்னை விட்டு முற்றிலுமாகப் போனால்
அடியேன் மோக்ஷம் போவேன் " என்றார் . . .
நானும் . . . நான் போனால் போவேன் !
நீ . . . போவாயா ? ? ?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக