ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 நவம்பர், 2012

க்ருஷ்ணதாசன் !

ராதேக்ருஷ்ணா

காமமே . . .
என்னோடு நீ இருக்கமுடியாது !

கோபமே . . .
என்னோடு இருந்தால் உனக்கு கஷ்டம்!

துக்கமே . . .
என்னை நீ ஜெயிக்கமுடியாது !

குழப்பமே . . .
என்னை நீ எதுவும் செய்ய முடியாது !

தோல்வியே . . .
எனக்கும் உனக்கும் சம்மந்தமில்லை !

பயமே . . .
என்னை நீ பயமுறுத்த முடியாது !

சந்தேகமே . . .
என் வழியில் நீ வரமுடியாது !

    வியாதிகளே . . .
என்னை நீ அழிக்கமுடியாது !

விதியே . . .
என் வாழ்வில் நீ விளையாடமுடியாது !

மரணமே . . .
என்றுமே நீ என்னை நெருங்கமுடியாது !

என்னடா . . .
இவன் ஆணவத்தில் உளறுகிறான்
என்று நினைக்கிறாயா. . . 

நான் உளறவில்லை ! ! !
இதுவே சத்தியம் !

இது ஆணவமல்ல . . .
இது பக்தியின் நிலை . . .

பக்தனின் உன்னத நம்பிக்கை . . .
அசைக்கமுடியாத நம்பிக்கை !

எது வந்தாலும் நான் க்ருஷ்ண தாசன் !
அதனால் என்னிடம் எதுவும் நெருங்காது !

நீயும் க்ருஷ்ண தாசனே . . .
நீயும் க்ருஷ்ண தாசியே . . .

நாம் பக்திக்காகப் பிறந்தவர்கள் !
அது மட்டுமே நம்மிடம் நெருங்கும் !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP