ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 நவம்பர், 2012

பாதுகாப்பு ! ! !


ராதேக்ருஷ்ணா

 பாதுகாப்பு !

ஆமைக்கு அதன்
ஓடே பாதுகாப்பு !

ரோஜாவிற்கு அதன்
முள்ளே பாதுகாப்பு !

தேங்காவிற்கு அதன்
நாரே பாதுகாப்பு !

    கண்ணுக்கு அதன்
இமையே பாதுகாப்பு !
  
இப்படி உலகில் எதை எடுத்தாலும்
அதோடு கூடவே இருக்கும்
விஷயங்களே அதற்கு பாதுகாப்பு !

அதுபோலே மனிதருக்கும் . . .

மனிதனுக்கு எது பாதுகாப்பு ?

அவனோடு கூடவே இருக்கும்
பிரச்சனைகளே அவனுக்கு பாதுகாப்பு !


என்ன உளறல் இது என்று நினைக்கிறாயா ? ?

ஸ்வாமி விவேகாந்தர் சொன்னார் ...
"ஒரு நாள் பொழுதில் நீ எந்த விதமான
பிரச்சனைகளையும் சந்திக்கவில்லையென்றால்;
ஒன்றை நீ தீர்மானமாக தெரிந்துகொள்ளலாம் !
அது . .. நீ தவறான பாதையில் செல்கிறாய் என்று !"


இதன் அர்த்தம் . . .
பிரச்சனைகள் உனக்கு நன்மையே !



உனக்கு பிரச்சனைகள் உள்ளவரை
உன் வாழ்க்கையும் நடக்கும் !


இதுவே வாழ்வின் ரகசியம் !


உன்னுடைய ஒவ்வொரு பிரச்சனையும்
உனக்கு ஒரு பாதுகாப்பே !



அதனால் பாதுகாப்பை
கொண்டாடுவாய் !



பாதுகாப்பை பத்திரமாக வை !



யார் நம்மை விட்டுப்போனாலும்,
நம் பிரச்சனைகள் நம்மை ஒரு நாளும்
 விட்டு செல்வதில்லை !




அதனால் நமக்கு ஒரு
பிரியா தோழன் / தோழி ..
நம் பிரச்சனையே !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP