நீ ஞானி . . .
ராதேக்ருஷ்ணா
அழுவதினால் பிரச்சனைகள் தீர்வதில்லை !
புலம்புவதால் துன்பங்கள் மாறுவதில்லை !
குழம்புவதால் பதில் தெரிவதில்லை !
கோபப்படுவதினால் சண்டைகள் நிற்பதில்லை !
பயப்படுவதால் வியாதிகள் சரியாவதில்லை !
பொய் சொல்வதால் பாவங்கள் விலகுவதில்லை !
சந்தேகப்படுவதால் அன்பு வளருவதில்லை !
வேஷத்தினால் நட்பு நிலைப்பதில்லை !
அதிகாரத்தினால் சாதனைகள் நடப்பதில்லை !
அஹம்பாவத்தினால் பக்தி பிரகாசிப்பதில்லை !
சுயநலத்தால் ஞானம் பிறப்பதில்லை !
அசிரத்தையினால் வாழ்க்கை உயருவதில்லை !
பொறாமையினால் நிம்மதி நிலைப்பதில்லை !
இவையெல்லாம் புரிந்ததா ?
புரியவில்லை என்றால் மீண்டும் படி !
அரைகுறையாக புரிந்தால் ? ? ?
மீண்டும் . . . மீண்டும் . . . படி !
முழுவதுமாக புரிந்துவிட்டால் ? ? ?
நீ பக்குவமடைகிறாய் !
புரிந்தது செயலில் வந்தால் ? ? ?
நீ ஞானி . . .
நீ ஞானியாக வேண்டும் என்பதே
என் லக்ஷியம் . . .
மன்னிக்கவேண்டுகிறேன் !
இது என் லக்ஷியம் அல்ல !
நமது இந்து தர்மத்தின் லக்ஷியம் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக