ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 நவம்பர், 2012

உணர்வாய் ! ! !

ராதேக்ருஷ்ணா
 
 
 ப்ரார்த்தனை
செய்து கொண்டே வா !
 
நாம ஜபம்
செய்து கொண்டே வா !
 
 முயற்சிகளை
செய்து கொண்டே வா !
 
கடமைகளை
செய்து கொண்டே வா !
 
பக்தி
செய்து கொண்டே வா ! 
 
 நிதானமாக இரு !
 
பொறுமையை இழக்காதே !
 
நம்பிக்கையை விடாதே !
 
 
நிச்சயம் காலம் வரும் !
 
நீ வாழ்வில் வெற்றி பெறுவதை
நீயே கண்ணாரக் காண்பாய் . . .
 
உலகின் சரித்திரத்தைப் புரட்டிப் பார் !
 
 பொறுமையோடிருப்பவரும்,
முயற்சியை விடாதவரும்,
நம்பிக்கையோடு வாழ்பவரும்,
தோற்றதே இல்லை . . .
 
    ப்ரஹ்லாதனின் பொறுமை
அவனை ஜெயிக்கவைத்தது !
 
பாண்டவரின் நம்பிக்கை
அவர்களுக்கு ராஜ்ஜியம் தந்தது !
 
த்ரௌபதியின் நாமஜபம்
அவள் மானத்தைக் காத்தது !
 
 குந்தி தேவியின் ப்ரார்த்தனை
அவள் குடும்பத்திற்கு வழி காட்டியது !
 
துருவனின் விடா முயற்சி
அவனுக்கு ஸ்ரீ ஹரியின் தரிசனம் தந்தது !
 
 சீதா பிராட்டியின்
பக்தி அவளை ராமனிடம் சேர்த்தது !
 
உன் மனம் திடமாகட்டும் !
உன் நம்பிக்கை உறுதிபடட்டும் !
உன் முயற்சி அதிகமாகட்டும் !
உன் பக்தி வளரட்டும் !
உன் நாம ஜபம் கூடட்டும் !
உன் பொறுமை நீளட்டும் !
 
சத்தியமாய் இதெல்லாம் நிரந்தரமாக
உன்னிடத்தில் இருக்கும் சமயத்தில்,
நீ உன்னுள்ளே க்ருஷ்ணனை உணர்வாய் !
 
க்ருஷ்ணனை உணர்வாய் . . .
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP