ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 ஜூலை, 2012

ஆதிகேசவனை அடை . . .

ராதேக்ருஷ்ணா



திருவட்டாறு ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

கேசனை வதம் செய்து, கேசியின்
மேல் துயில் பயிலும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

என் பத்மநாபனின் அண்ணன் ஆதிகேசவன்
 அடி இணை அடை மட நெஞ்சே . . .

சேர நாட்டு ஸ்ரீரங்கனான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


22 அடி உயரமான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

16008 சாளக்ராம மூர்த்தியான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


கங்கையும் தாமிரபரணியும் தொழும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

திருவடி அருகில் சிவனுக்கு
இடம் தந்த அழகன் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


மது கைடபரையும் தன் திருவடியில்
பத்திரமாய் வைத்திருக்கும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


பஞ்சாயுதங்களையும் ஜாக்கிரதையாய்
தன் கண்பார்வையில் கொண்ட ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . . 

வசீகர முகம், ஈர்க்கும் கண்கள்,
காக்கும் கைகள் கொண்ட ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . . 

ஹாதலேய முனிவரின் தகப்பன் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

ஆதி அனந்தபுரத்து ஆதி கேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


வசிஷ்டரும் தவமிருந்து கண்ட ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

பரசுராமரின் பூஜையில் திளைத்த ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


நம்மாழ்வார் மயங்கின ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

சூரியனும் தன் கதிர் கரங்களால்
புரட்டாசி, பங்குனியில் பூஜை செய்யும்
ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யருக்கு
ப்ரும்ம சம்ஹிதை தந்த ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

ஆற்காட் நவாபையும் தனக்கு
மண்டபமும்,தொப்பியும் தர வைத்த
ஆதிகேசவன் அடி இணை அடை மட நெஞ்சே . . .

ஆர்ப்பாட்டம் இல்லாத பக்தர்களின்
பக்தவத்சலனான ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

 வட்டமாய் பரளி ஆறு சூழ்ந்திருக்க,
பூமி தேவி தந்த சிறிய மேட்டில்,
நிம்மதியாய் சயனிக்கும் ஆதிகேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .


பத்மநாப தாசனான கோபாலவல்லியையும்,
தன் கருணையால் ஆண்ட
அண்ணன் ஆதி கேசவன்
அடி இணை அடை மட நெஞ்சே . . .

  

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP