சித்த வகுளம் !
ராதேக்ருஷ்ணா
நான் நிறைய நாம ஜபம்
ஜபிக்க வேண்டும் !
எனக்கு நிறைய நாம ஜபம்
பொங்கிப் பொங்கி வரவேண்டும் !
க்ருஷ்ண சைதன்யர் ஆனந்தப்படும்படி
நான் ஜபிக்கவேண்டும் !
புரீ ஜகந்நாதன் உருகும்படி
நான் ஜபிக்கவேண்டும் !
ராதிகா ராணி ரசித்து ஆடும்படி
நான் ஜபிக்கவேண்டும் !
பலதேவர் சபாஷ் சொல்லும்படி
நான் ஜபிக்கவேண்டும் !
சுபத்ரா தேவி தட்டிக்கொடுக்கும்படி
நான் ஜபிக்கவேண்டும் !
என் உடலின் ஒவ்வொரு
ரோமக்காலும் நாமத்தில் திளைக்கவேண்டும் !
என் உடலை கண்டதுண்டமாக
வெட்டினாலும் நான் ஜபிக்கவேண்டும் !
சளைக்காமல் வீசுகின்ற காற்றைப்போல்
நான் சலிக்காமல் நாமம் ஜபிக்கவேண்டும் !
நில்லாமல் அடிக்கின்ற கடலலை போல்
நான் தடையற நாமம் ஜபிக்கவேண்டும் !
மேலிருந்து கீழே வேகமாய் வரும்
கங்கையின் பிரவாகம் போல்
நான் வேகமாய் நாமம் ஜபிக்கவேண்டும் !
அசராமல் நிதானமாய் எல்லாவற்றையும்
பொறுத்துக்கொண்டு சுழலும் பூமி போல்
நான் கலங்காமல் நாமம் ஜபிக்கவேண்டும் !
எத்தனை அனுபவித்தாலும் தீராத
உடலின் காம இச்சை போல்
தாகத்தோடு நான் நாமம் ஜபிக்கவேண்டும் !
எத்தனை சுவைத்தாலும் இன்னும்
சுவையாய் கேட்க்கும் நாவின் ருசி போல்
ஆசையோடு நான் நாமம் ஜபிக்கவேண்டும் !
எத்தனை பிறவிகள் பிறந்த போதும்
குறையாத பிராரப்த கர்மா போல்
கணக்கில்லாத நாமம் நான் ஜபிக்கவேண்டும் !
எத்தனை விதமாக நாம ஜபம்
ஜபிக்கமுடியுமோ அத்தனை விதமாக
நான் நாமஜபம் ஜபிக்கவேண்டும் !
துருவனைப் போல்
நாமம் ஜபிக்கவேண்டும் !
ப்ரஹலாதனைப் போல்
நாமம் ஜபிக்கவேண்டும் !
ஆண்டாளைப் போல்
நாமம் ஜபிக்கவேண்டும் !
இதெல்லாம் என்னால் முடியுமா ? ! ?
சத்தியமாய் முடியவேமுடியாது . . .
ஆனால் எனக்கு வேண்டும் . . .
என்ன செய்வது ? ? ?
ஜகன்னாதனிடம் கேட்டேன் . . .
அவன் அழகாக சொன்னான் !
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின்
செல்லப் பிள்ளை ஹரி தாஸ் யவன்
வாழ்ந்த சித்த வகுள மரத்தடிக்கு
என்னை அனுப்பினான் என் ஜகந்நாதன் !
புரீயின் ஜகந்நாதனின் கோயிலின்
வரையறைக்குள் நுழையும் பக்தி
தனக்கில்லை என்று ஹரி தாஸ் யவன்
தன்னை ஒதுக்கிக்கொண்டு வாழ்ந்த இடம் இது !
தன்னை தாழ்வாக நினைக்கும்
உன்னத குணத்தைக் கண்டு
ஸ்ரீ சைதன்யர் ஹரி தாசருக்கு
தன்னைக் கொடுத்த இடம் இது !
நித்தியம் ஜகந்நாதனை தரிசித்துவிட்டு
அவனின் பிரசாதத்தோடு
சைதன்யர் வந்து ஹரிதாசரோடு
நாம ஆனந்தத்தில் திளைத்த இடம் இது !
தினமும் ஹரிதாசர் மூன்று லக்ஷம் தடவை
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
என்று ஜபித்த இடம் இது !
ஒரு நாள் சைதன்யர் ஜகந்நாதனின்
பல் தேய்த்த குச்சியை பக்தியோடு
இங்கே நட்டுவைக்க அது மரமாகி
ஹரிதாசருக்கு ஜகந்நாதனின் நிழலை
ஹரிதாசருக்கு தந்த இடம் !
மரப் பிரபுவான ஜகன்னாதனே
ஹரிதாசரின் நாமஜபத்திற்க்காக தன்னையே
மரமாகத் தந்து அவரை அவன்
அனுபவித்த உன்னத இடம் !
ஹரிதாசர் தன் உடல் என்னும் கூட்டை
சைதன்யரின் திருமுகக்கதைப்
பார்த்துக்கொண்டே சுகமாய் விட்டு
ஜகன்னாதனோடு இரண்டறக் கலந்த இடம் !
சைதன்யர் ஹரிதாசரின் புண்ணிய உடலை
தன் இரு கைகளிலும் சுமந்துகொண்டு
கண்களில் கண்ணீர் வழிய மஹா மந்திரத்தை
ஜபித்து நடனமாடிய சுத்தமான இடம் !
ஹரிதாசருக்கு நாமம் சித்தியான
சித்த வகுள மரத்தடியே எனக்கும்
நாம ஜபம் சித்தியாகும் இடமென்று
என் ஜகன்னாதன் எனக்குக் காட்டிவிட்டான் !
ஜகந்நாத ரூபமான சித்த வகுள மரமே !
நீயோ ஜகன்னாதனின் திருவாயை
ருசித்த பல்குச்சி !
க்ருஷ்ண சைதன்ய சித்த வகுள மரமே !
நீயோ ஸ்ரீ சைதன்யரின் ஸ்பரிசம்
அனுபவித்த பாக்கியசாலி !
ஹரிதாஸ சித்த வகுள மரமே !
நீயோ ஹரிதாசருக்கு ப்ரத்யக்ஷ
குரு பகவான் !
நான் நல்லவன் இல்லை !
நான் பக்தன் இல்லை !
நான் சிஷ்யன் இல்லை !
நான் குரு இல்லை !
ஆனால் நான் விடாது நாம ஜபம்
செய்ய நீயே எனக்கு அருளவேண்டும் !
சித்த வகுளமே !
எனக்கும் நாமம் சித்தியாக
உடனே அருளுவாய் !
அடியேனும் சைதன்யரின் தாசன் தான் !
நான் நிறைய நாம ஜபம்
ஜபிக்க வேண்டும் !
எனக்கு நிறைய நாம ஜபம்
பொங்கிப் பொங்கி வரவேண்டும் !
க்ருஷ்ண சைதன்யர் ஆனந்தப்படும்படி
நான் ஜபிக்கவேண்டும் !
புரீ ஜகந்நாதன் உருகும்படி
நான் ஜபிக்கவேண்டும் !
ராதிகா ராணி ரசித்து ஆடும்படி
நான் ஜபிக்கவேண்டும் !
பலதேவர் சபாஷ் சொல்லும்படி
நான் ஜபிக்கவேண்டும் !
சுபத்ரா தேவி தட்டிக்கொடுக்கும்படி
நான் ஜபிக்கவேண்டும் !
என் உடலின் ஒவ்வொரு
ரோமக்காலும் நாமத்தில் திளைக்கவேண்டும் !
என் உடலை கண்டதுண்டமாக
வெட்டினாலும் நான் ஜபிக்கவேண்டும் !
சளைக்காமல் வீசுகின்ற காற்றைப்போல்
நான் சலிக்காமல் நாமம் ஜபிக்கவேண்டும் !
நில்லாமல் அடிக்கின்ற கடலலை போல்
நான் தடையற நாமம் ஜபிக்கவேண்டும் !
மேலிருந்து கீழே வேகமாய் வரும்
கங்கையின் பிரவாகம் போல்
நான் வேகமாய் நாமம் ஜபிக்கவேண்டும் !
அசராமல் நிதானமாய் எல்லாவற்றையும்
பொறுத்துக்கொண்டு சுழலும் பூமி போல்
நான் கலங்காமல் நாமம் ஜபிக்கவேண்டும் !
எத்தனை அனுபவித்தாலும் தீராத
உடலின் காம இச்சை போல்
தாகத்தோடு நான் நாமம் ஜபிக்கவேண்டும் !
எத்தனை சுவைத்தாலும் இன்னும்
சுவையாய் கேட்க்கும் நாவின் ருசி போல்
ஆசையோடு நான் நாமம் ஜபிக்கவேண்டும் !
எத்தனை பிறவிகள் பிறந்த போதும்
குறையாத பிராரப்த கர்மா போல்
கணக்கில்லாத நாமம் நான் ஜபிக்கவேண்டும் !
எத்தனை விதமாக நாம ஜபம்
ஜபிக்கமுடியுமோ அத்தனை விதமாக
நான் நாமஜபம் ஜபிக்கவேண்டும் !
துருவனைப் போல்
நாமம் ஜபிக்கவேண்டும் !
ப்ரஹலாதனைப் போல்
நாமம் ஜபிக்கவேண்டும் !
ஆண்டாளைப் போல்
நாமம் ஜபிக்கவேண்டும் !
இதெல்லாம் என்னால் முடியுமா ? ! ?
சத்தியமாய் முடியவேமுடியாது . . .
ஆனால் எனக்கு வேண்டும் . . .
என்ன செய்வது ? ? ?
ஜகன்னாதனிடம் கேட்டேன் . . .
அவன் அழகாக சொன்னான் !
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின்
செல்லப் பிள்ளை ஹரி தாஸ் யவன்
வாழ்ந்த சித்த வகுள மரத்தடிக்கு
என்னை அனுப்பினான் என் ஜகந்நாதன் !
புரீயின் ஜகந்நாதனின் கோயிலின்
வரையறைக்குள் நுழையும் பக்தி
தனக்கில்லை என்று ஹரி தாஸ் யவன்
தன்னை ஒதுக்கிக்கொண்டு வாழ்ந்த இடம் இது !
தன்னை தாழ்வாக நினைக்கும்
உன்னத குணத்தைக் கண்டு
ஸ்ரீ சைதன்யர் ஹரி தாசருக்கு
தன்னைக் கொடுத்த இடம் இது !
நித்தியம் ஜகந்நாதனை தரிசித்துவிட்டு
அவனின் பிரசாதத்தோடு
சைதன்யர் வந்து ஹரிதாசரோடு
நாம ஆனந்தத்தில் திளைத்த இடம் இது !
தினமும் ஹரிதாசர் மூன்று லக்ஷம் தடவை
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
என்று ஜபித்த இடம் இது !
ஒரு நாள் சைதன்யர் ஜகந்நாதனின்
பல் தேய்த்த குச்சியை பக்தியோடு
இங்கே நட்டுவைக்க அது மரமாகி
ஹரிதாசருக்கு ஜகந்நாதனின் நிழலை
ஹரிதாசருக்கு தந்த இடம் !
மரப் பிரபுவான ஜகன்னாதனே
ஹரிதாசரின் நாமஜபத்திற்க்காக தன்னையே
மரமாகத் தந்து அவரை அவன்
அனுபவித்த உன்னத இடம் !
ஹரிதாசர் தன் உடல் என்னும் கூட்டை
சைதன்யரின் திருமுகக்கதைப்
பார்த்துக்கொண்டே சுகமாய் விட்டு
ஜகன்னாதனோடு இரண்டறக் கலந்த இடம் !
சைதன்யர் ஹரிதாசரின் புண்ணிய உடலை
தன் இரு கைகளிலும் சுமந்துகொண்டு
கண்களில் கண்ணீர் வழிய மஹா மந்திரத்தை
ஜபித்து நடனமாடிய சுத்தமான இடம் !
ஹரிதாசருக்கு நாமம் சித்தியான
சித்த வகுள மரத்தடியே எனக்கும்
நாம ஜபம் சித்தியாகும் இடமென்று
என் ஜகன்னாதன் எனக்குக் காட்டிவிட்டான் !
ஜகந்நாத ரூபமான சித்த வகுள மரமே !
நீயோ ஜகன்னாதனின் திருவாயை
ருசித்த பல்குச்சி !
க்ருஷ்ண சைதன்ய சித்த வகுள மரமே !
நீயோ ஸ்ரீ சைதன்யரின் ஸ்பரிசம்
அனுபவித்த பாக்கியசாலி !
ஹரிதாஸ சித்த வகுள மரமே !
நீயோ ஹரிதாசருக்கு ப்ரத்யக்ஷ
குரு பகவான் !
நான் நல்லவன் இல்லை !
நான் பக்தன் இல்லை !
நான் சிஷ்யன் இல்லை !
நான் குரு இல்லை !
ஆனால் நான் விடாது நாம ஜபம்
செய்ய நீயே எனக்கு அருளவேண்டும் !
சித்த வகுளமே !
எனக்கும் நாமம் சித்தியாக
உடனே அருளுவாய் !
அடியேனும் சைதன்யரின் தாசன் தான் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக