நீயும் நிம்மதியாயிரு . . .
ராதேக்ருஷ்ணா
குருவை நீ கடவுளாக
கொண்டாடவேண்டாம் . . .
மனிதனாய் மதித்தால் போதும் !
குருவை நீ அவதாரமாய்
ரசிக்கவேண்டாம் . . .
ஒரு நல்லவராய் ஏற்றால் போதும் !
குருவை நீ அதிசயப்பிறவியாய்
மதிக்கவேண்டாம் . . .
உன் நலம் விரும்பியாய் நம்பினால் போதும் !
குருவின் திரு உருவப்படம் வைத்து
நீ பூஜை செய்ய வேண்டாம் . . .
அவர் சொல்படி பக்தி செய்தால் போதும் !
குருவின் பெருமையை நீ
உலகறியச் செய்ய வேண்டாம் . . .
அவர் மரியாதையைக் கெடுக்காமலிருந்தால்
அதுவே போதும் !
குருவிற்கு நீ கனகாபிஷேகம்
செய்யவே வேண்டாம் . . .
அவர் தரும் அன்பை உள்ளபடி
அனுபவித்தால் போதும் !
குருவின் திருவடியில் நீ
விழுந்து சேவிக்கவேண்டாம் . . .
உன் குருவிற்கு அவப்பெயர்
வராமல் நடந்தால் போதும் !
குருவின் பின்னாலேயே நீ
சுற்ற வேண்டாம் . . .
குரு சொல்படி க்ருஷ்ணனை
நீ வசீகரித்தால் அதுவே போதும் !
குருவிற்கு நீ உன் வாழ்வைத் தந்து
பணிவிடை செய்யவேண்டாம் . . .
அவர் நேரத்தை நீ வீணடிக்காமல்
இருந்தால் போதும் !
குருவை நீ ரசிக்கவேண்டாம் . . .
அவரின் உபதேசத்தை ரசித்தால் போதும் !
குரு சொல்வதை எல்லாம்
நீ ஏற்றுக்கொள்ள வேண்டாம் . . .
குருவிடம் நீ உண்மையாயிருந்தால் போதும் !
குருவோடு நீ இருக்க வேண்டாம் . . .
உன் மனதில் குருவை வைத்தால் போதும் !
குருவிடம் அன்பாய் இரு . . .
குருவிடம் பணிவாய் இரு . . .
குருவிடம் நம்பிக்கையோடு இரு . . .
குருவிடம் நிதானமாய் இரு . . .
குருவிடம் த்ருடமாய் இரு . . .
இது போதும் . . .
நீயும் நிம்மதியாய் இரு . . .
குருவுக்கும் நிம்மதி தா . . .
குருவைப் புரிந்துகொண்டு
என்றும் நிம்மதியாயிரு . . .
குருவுக்கும் நிம்மதி தா . . .
குருவைப் புரிந்துகொண்டு
என்றும் நிம்மதியாயிரு . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக