ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 ஜூலை, 2012

சோறு வேண்டுமா ?

ராதேக்ருஷ்ணா
 
 
 
ஆகாரம் . . .
உலகின் ஆதாரம் . . .
 
 
 
சிறு பூச்சிக்கும் ஆகாரம் தேவை !
பெரிய யானைக்கும் ஆகாரம் தேவை !
நல்ல மனிதருக்கும் ஆகாரம் தேவை !
மஹா பாபிக்கும் ஆகாரம் தேவை !
உத்தம பக்தருக்கும் ஆகாரம் தேவை !
நாஸ்தீகவாதிக்கும் ஆகாரம் தேவை !
 
 
பணக்காரருக்கும் ஆகாரம் தேவை !
பிச்சைக்காரனுக்கும் ஆகாரம் தேவை !
அழகிக்கும் ஆகாரம் தேவை !
குரூபிக்கும் ஆகாரம் தேவை !
சிறுவருக்கும் ஆகாரம் தேவை !
பெரியவருக்கும் ஆகாரம் தேவை !
 
 
 
ஞானிக்கும் ஆகாரம் தேவை !
அஞ்ஞானிக்கும் ஆகாரம் தேவை !
யோகிக்கும் ஆகாரம் தேவை !
போகிக்கும் ஆகாரம் தேவை !
ஆரோக்கியவானுக்கும் ஆகாரம் தேவை !
நோயாளிக்கும் ஆகாரம் தேவை !
 
 
 
ப்ரும்மசாரிக்கும் ஆகாரம் தேவை !
க்ருஹஸ்தருக்கும் ஆகாரம் தேவை !
பற்றில்லாதவருக்கும் ஆகாரம் தேவை !
சன்னியாசிக்கும் ஆகாரம் தேவை !
தொழிலாளிக்கும் ஆகாரம் தேவை !
முதலாளிக்கும் ஆகாரம் தேவை !
 
 
 
 ஆகாரம் தேவையில்லை என்று
ஒருவரும் சொல்லமுடியாது !


தெய்வத்திற்கும் ஆகாரம் தேவை . . .
ஆனால் நமக்காக தெய்வத்திற்கு
ஆகாரம் தேவை . . .



தெய்வம் உண்ட ஆகாரம்
நமக்கு என்றும் நன்மை பயக்கும் !



அதுவே நிவேதனம் . . .



தெய்வத்திற்கு ஆகாரம் தரும்
உன்னத வழக்கம் நம்முடைய
சனாதன ஹிந்து தர்மத்திலேதான் உண்டு !
 
 
 
நாம் சாப்பிடுவதை, நம் தெய்வங்கள்
ஏற்பதுதானே அற்புதம் . . .
 
 
 
தெய்வம் சாப்பிடுவதை நாம் ஏற்பதுதானே
தெய்வத்திற்கு நாம் தரும் மரியாதை . . .
 
 
 
இதுவே நிவேதனத்தின் ரஹஸ்யம் . . .
 
 
 
நிவேதனம் என்றால் அர்பித்தல்
என்று அர்த்தம் . . .
 
 
 
 பகவானுக்கு அர்பிக்கத் தானே
வாழ்க்கை . . .
பகவான் தருவதை அனுபவிக்கவே
வாழ்க்கை . . .
 
 
பகவான் அனுபவித்த
ஆகாரத்தைச் சாப்பிட்டால்
சுகமாய் வாழலாம் . . .
 
 
 
தினமும் ஹிந்துக்கள் வீட்டில்
பகவானுக்கு நிவேதனம் உண்டு !
தினமும் நம் கோயில்களில்
பகவானுக்கு நிவேதனம் உண்டு !
 
 
பகவானுக்காக சமைப்பதே சுகம் !
 
 
 
அதுபோல் ஒரு கைங்கர்யம்
கிடைத்தால் . . .
சொல்ல வார்த்தைகளில்லை . . .
 
 
 
அதுவும் பூரி ஜகந்நாதனின்
திருமடைப்பள்ளியில் (சமையலறை)
கைங்கர்யம் கிடைத்தால் . . .
ஆஹா . . . ஆஹா . . . ஆஹா . . .
 
 
 
உலகின் மிகப்பெரிய சமையலறை !
கண்டு அசந்து போனேன் . . .
மயக்கம் தான் வரவில்லை . . .
 
 
 
எத்தனை பேர் சுழன்று சுழன்று
வேலை செய்கிறார்கள் . . .
அம்மம்மா . . .எத்தனை சக்தி !
 
 
 
 எல்லாமே பெரியது இங்கே...
ஜகந்நாதனைப் போல் !


தினம் தினம்
பக்தருக்காக சமையல் . . .


அடுப்பு : 752
சமையல்காரர்கள் : 500
உதவியாளர்கள் : 300
ஆகார வகைகள் : 56

என்ன தலை சுற்றுகிறதா . . .



பகவானின் சமையலுக்காக
கங்கையும், யமுனையும்
இங்கே கிணற்றில் சுறக்கிறார்கள் !
 
 

தண்ணீரை இறைக்கவே
ஒரு கூட்டம் . . .



தண்ணீரை கொண்டுசெல்ல
ஒரு கூட்டம் . . .



காய்கறி நறுக்க ஒரு கூட்டம் . . .



தேங்காய் துறுவ ஒரு கூட்டம் . . .



மண்பானைகளை கொண்டுவர
ஒரு கூட்டம் . . .



அரிசியை இடிக்க ஒரு கூட்டம் . . .



துவையல் அறைக்க ஒரு கூட்டம் . . .



காய்கறி அலம்ப ஒரு கூட்டம் . . .



சமைத்ததை எடுத்து வைக்க ஒரு கூட்டம் . . .



சாமான் எடுத்துக் கொடுக்க ஒரு கூட்டம் . . .



விறகு கொண்டு வர ஒரு கூட்டம் . . .
 
 
 
கோயிலில் பக்தர்களின்
கூட்டத்தை விட,இந்த
சமையலறைக் கூட்டம்தான் பெரியது !



வெய்யிலோ,மழையோ,பனியோ
ஒரு நாளும் இது மாறுவதில்லை . . .



ஜகந்நாதனுக்கு தன் பக்தருக்கு
வயிறார ஆகாரம் கொடுப்பதே தவம் . . .


கோபால குழந்தைகளின்
பசியைப் போக்க ப்ராம்மணர்களிடம்
கையேந்தி கெஞ்சினவனாயிற்றே !


ப்ராம்மண பத்னிகளின் பக்தியோடு
கூடிய ஆகாரத்தைத் தானும்
அனுபவித்து பக்தருக்கும் தந்தவனாயிற்றே !



ப்ராம்மணர்கள் ஆகாரம் தரவில்லை !
அதனால் அவர்களையே சமைக்கும்படி
ஒரு உத்தரவு இட்டுவிட்டான் போலும் !



அதிலும் சமையலறையில் வேலை
செய்பவர் தன் வீட்டில் வயிறார
உண்டு விட்டுதான் தினமும்
இவனுக்கு சமைக்க வரவேண்டும் !



ஜகந்நாதனுக்கு தேங்காய், பரங்கிக்காய்,
வாழைக்காய், இவையெல்லாம்
ரொம்பப் பிடிக்கிறது !
 
 


எத்தனை சுவை . . .
ஜகந்நாதனின் ப்ரசாதம் சாப்பிட
சத்தியமாய் உனக்கு பத்து வயிறாவது
நிச்சயம் வேண்டும் . . .
ஒரு வயிறு போதவே போதாது . . .



ஜகந்நாதனின் மனது போலவே
கொடுப்பவரின் மனதும் . . .
அள்ளி அள்ளித் தருகிறார்கள்
ஜகந்நாதனின் ப்ரசாதத்தை . . .



இன்றும் என் நாவிலும்,
மனதிலும், ஆத்மாவிலும்,
கலந்து விட்ட சுவை . . .



ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரும்
தன்னை மறந்து அனுபவித்த ப்ரசாதம் !



ஜகந்நாதனே ப்ரசாத ரூபம் . . .


நாமோ நாவிற்கு வசப்பட்டவர் . . .
நாம ஜபத்தில் ருசி இல்லை . . .
ஆனால் சாப்பாடு ருசியோ
ஆசையோ துளியும் குறைவதில்லை . . .



அதனால் ஜகந்நாதன் தானே
பக்தருக்கு ஆகாரமாய் வருகிறான்  . . .




விறகு அடுப்பில், மண் பானையில்
சமைத்த சோறு வேண்டுமா ?
சுடச்சுட வேண்டுமா ?
சுவை மிகுந்ததாய் வேண்டுமா  ?



உடனே ஜகந்நாதனின் புரீக்குக் கிளம்பு !



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP