ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 15 ஜூலை, 2012

சாந்தானந்த புரி !

ராதேக்ருஷ்ணா
 
 
 
 
சன்னியாசி . . .
 
 
 
எல்லாவற்றையும் தெய்வத்திடம்
ஒப்படைத்தவரே சன்னியாசி !



நாளைய பொழுதைப் பற்றி
கவலைப்படாதவரே சன்னியாசி !



தனக்கென எதையுமே
சேர்த்து வைக்காதவரே சன்னியாசி !
 
 
 
எல்லோரிடமும் சமமாக
அன்பு காட்டுபவரே சன்னியாசி !
 
 
 
தற்பெருமையில்லாமல், அடுத்தவரைப்
பெருமையாகப் பேசுபவரே சன்னியாசி !
 
 
 
சம்சாரிகளோடு இருந்தாலும்
பற்றுதல் இல்லாதவரே சன்னியாசி !
 
 
 
அஞ்ஞானிகளின் அஞ்ஞானத்தை
நாசம் செய்பவரே சன்னியாசி !
 
 
 
 சர்வ ஞான ஸ்வரூபனாக இருந்தாலும்
எளிமையாய் பழகுபவரே சன்னியாசி !



பாகவதத்தில் திளைத்திருந்து
அதையே பிதற்றுபவரே சன்னியாசி !



யாரையும் தான் பற்றாமல்,
எல்லோரையும் தன்னைப் பற்ற
வைப்பவரே சன்னியாசி !



தான் செல்லுமிடமெல்லாம்
தெய்வத்தை ஸ்தாபிப்பவரே
சன்னியாசி !



தன் உடலைப் பற்றி
அக்கறை இல்லாதவரே சன்னியாசி !



 செங்கல்பொடிக் கூரை
வெண் பல் தவத்தவரே சன்னியாசி !



முதிர்ந்த உடலோடும்,
பழுத்த ஞானத்தோடும்,
குழந்தையாய் வாழ்பவரே சன்னியாசி !



தடுத்தாட்கொள்ளும் புருஷோத்தமரின்
உன்னத அடியவரே சன்னியாசி !
 
 
 
வசிஷ்டரின் ஹ்ருதய குகைக்குள்
நுழைந்து தன்னைக் கொடுப்பவரே
சன்னியாசி !
 
 
 
 
சாந்தமாகவும்,ஆனந்தமாகவும்
இருப்பவரே சன்னியாசி . . .
 
 
 
சாந்தத்தையும், ஆனந்தத்தையும்
அள்ளித் தருபவரே சன்னியாசி . . .
 
 
 
இத்தனையும் ஒரு சேர இருப்பவரே
உன்னத சன்னியாசி . . .
இல்லை . . . இல்லை . . .
இத்தனையும் உள்ளபடி இருப்பவரே
சாந்தானந்த புரி . . .


நரைத்த தாடி ; வெண் பல் ;
பிஞ்சு விரல்கள் ; காவி வஸ்திரம் ;
பக்தர்களிடம் பரிவு ; சிரித்த முகம் ; 
வரவேற்கும் வாய்மொழி ; சத்சங்க பேச்சு ; 
தன் நாக்கைக் கடித்து ரசிக்கும் ரசிகன் ;
பாகவத பக்தன் ; சம்ஸ்க்ருத பண்டிதன் ;
தன் உடலை மறந்த அசடன் ;
எல்லாவற்றையும் பக்தருக்கு தரும் தர்மன் ;
புருஷோத்தம தாசன்;
இதுவே சாந்தானந்த புரி . . .
 
 
 


ஜெய் சாந்தானந்த புரி . . .
சாந்தத்தையும் ஆனந்தத்தையும்
புரியாக (உடலாக, உள்ளமாக)
கொண்ட ஒரு வயோதிகக் குழந்தை . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP