ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 ஜூலை, 2012

இதுதான் எனக்கு சுலபம் !

ராதேக்ருஷ்ணா

சாலைக்கிணற்றில் ஒரு
பூச்சியாய் பிறக்கமாட்டேனா !

சாலைக்கிணற்றின் ஜலம் குடிக்கும்
ஒரு நாயாக இருக்கமாட்டேனா !

சாலைக்கிணற்றின் ஒரு பக்கச் சுவராக
காலம் முழுதும் இருக்கமாட்டேனா !

 சாலைக்கிணறைக் காக்கும்
வாயில் கதவாக மாறமாட்டேனா !

சாலைக்கிணறு இருக்கும்  உத்தமமான
தெருவாக நான் வாழமாட்டேனா !

சாலைக்கிணற்றில் இறங்கி
தண்ணீர் முகக்கும் குடமாய் மாறமாட்டேனா !

 
சாலைக்கிணற்றில் இறங்கும் குடத்தை
சுமக்கும் கயிறாய் வாழமாட்டேனா !

சாலைக்கிணற்றின் அருகில் விளையாடும்
ஒரு சிறு குழந்தையாய் பிறக்கமாட்டேனா  !



சாலைக்கிணற்று ஜலத்தை சுமக்கும்  பக்தரின்
 தோளாக   வாய்க்கமாட்டேனா !



 சாலைக்கிணற்றடியில் ஒரு புல்லாகவோ,
சிறு கல்லாகவோ ஆகமாட்டேனா !



ராமானுஜா ...
எனக்கும் உன் சாலைக்கிணற்றோடு
ஒரு சம்மந்தம் தயவு செய்து தந்துவிடு !





அப்பொழுதான் ,உன்னையும்,
உன் வரதராஜனையும்,
உன் பெருந்தேவித் தாயாரையும்
என்னால் அனுபவிக்க முடியும்  !



இதுதான் எனக்கு  சுலபம் !


சாலைக்கிணறே நீயே உன் ராமானுஜனிடம்
எனக்காக சிபாரிசு செய்யவேண்டும் !

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP