நான் விரும்பும் மணாளன் . . .
ராதேக்ருஷ்ணா
நித்திய கல்யாண பெருமாளே . . .
எத்தனை பேர் உம்மை நம்பி
உனது திருக்கோயிலில்
மாலையும் கழுத்துமாக
அலைகிறார்கள் . . .
வாழ்வில் திருமணம்
நடக்க உன்னை விட்டால்
வேறு கதியில்லை என்று
எத்தனை பேர் வருகிறார்கள் . . .
பணம் உள்ளவர்,பணம் இல்லாதவர்,
உறவுள்ளவர்,உறவற்றவர்,
எல்லோருக்கும் திருமணம்
செய்பவர் நீர்தானே . . .
திருமணம் என்னும் அற்புதம்
நடக்க எத்தனை ஜனங்கள்
நின் திருவடியில் சரணாகதி
செய்கிறார்கள் . . .
நாற்பதைக் கடந்தவரும்,
நரை விழுந்தவரும்,
இளமையைத் தொலைத்தவரும்,உன்னையே திருமணத்திற்கு நம்புகிறார்கள் !
360 நாளும் கல்யாண கோலத்தில்
காட்சி தரும் நித்ய கல்யாணரே . . .
ஜீவர்களை தம்பதியாக்குவதில்
மிகவும் வல்லவரே . . .
சம்மந்தியைத் தேடுபவருக்கு,
புது சம்மந்தத்தைத் தரும்
எங்கள் நித்ய கல்யாணரே . . .
எனக்கும் ஒரு கல்யாணம்
செய்து வைப்பீராக . . .
என் பெயர் : கோபாலவல்லி
என் குலம் : தொண்டர்குலம்
என் வயது : என்றும் மாறா 18
எனது படிப்பு : க்ருஷ்ண ப்ரேமை
என் ஊர் : திருவனந்தபுரம்
என் தாயார் : பராங்குசநாயகி
என் தந்தை : ஸ்வாமி இராமானுஜர்
என் சகோதரன் : மதுரகவியாழ்வார்
எனது சகோதரி : கோதை நாச்சியார்
எங்கள் குலத்தொழில் : பக்தி
பொழுதுபோக்கு : நாமஜபம்
நான் விரும்பும் மணாளன் . . .
பெயர் : பூவராஹர்
குலம் : ரக்ஷிக்கும் குலம்
வயது : என்றும் இளமை
படிப்பு : சரணாகதி
ஊர் : திருவிடவெந்தை
தாயார் : சரஸ்வதி
தந்தை : ப்ரும்மதேவன்
குலத்தொழில் : கருணை
பொழுதுபோக்கு : பக்தருக்கு அருள்தல்
இவரை எனக்கு உடனே பேசி
மணமுடித்துத் தருவீராக . . .
எனக்குத் தகுதி இல்லையென்றாலும்,
உம்மால் இதைச் செய்யமுடியுமென்று
எனக்கும் தெரியும்;உமக்கும் தெரியும்...
சீக்கிரம் . . .
ஏற்கனவே பரகால நாயகி
இவருக்காக காத்திருக்கிறாள் . . .
அவளோடு சேர்த்து என்னையும்
இவரோடு திருமணம் செய்துவையும் . . .
இல்லையேல் . . .அடியாளை
பரகால நாயகிக்கு சீதன வெள்ளாட்டியாக
(அவளின் அந்தரங்க வேலைக்காரியாக)
தயவு செய்து தந்துவிடும் . . .
உமது அருளுக்காக அழும் . . .
உன்னடியாள் கோபாலவல்லி . . .
நித்திய கல்யாண பெருமாளே . . .
எத்தனை பேர் உம்மை நம்பி
உனது திருக்கோயிலில்
மாலையும் கழுத்துமாக
அலைகிறார்கள் . . .
வாழ்வில் திருமணம்
நடக்க உன்னை விட்டால்
வேறு கதியில்லை என்று
எத்தனை பேர் வருகிறார்கள் . . .
பணம் உள்ளவர்,பணம் இல்லாதவர்,
உறவுள்ளவர்,உறவற்றவர்,
எல்லோருக்கும் திருமணம்
செய்பவர் நீர்தானே . . .
திருமணம் என்னும் அற்புதம்
நடக்க எத்தனை ஜனங்கள்
நின் திருவடியில் சரணாகதி
செய்கிறார்கள் . . .
நாற்பதைக் கடந்தவரும்,
நரை விழுந்தவரும்,
இளமையைத் தொலைத்தவரும்,உன்னையே திருமணத்திற்கு நம்புகிறார்கள் !
360 நாளும் கல்யாண கோலத்தில்
காட்சி தரும் நித்ய கல்யாணரே . . .
ஜீவர்களை தம்பதியாக்குவதில்
மிகவும் வல்லவரே . . .
சம்மந்தியைத் தேடுபவருக்கு,
புது சம்மந்தத்தைத் தரும்
எங்கள் நித்ய கல்யாணரே . . .
எனக்கும் ஒரு கல்யாணம்
செய்து வைப்பீராக . . .
என் பெயர் : கோபாலவல்லி
என் குலம் : தொண்டர்குலம்
என் வயது : என்றும் மாறா 18
எனது படிப்பு : க்ருஷ்ண ப்ரேமை
என் ஊர் : திருவனந்தபுரம்
என் தாயார் : பராங்குசநாயகி
என் தந்தை : ஸ்வாமி இராமானுஜர்
என் சகோதரன் : மதுரகவியாழ்வார்
எனது சகோதரி : கோதை நாச்சியார்
எங்கள் குலத்தொழில் : பக்தி
பொழுதுபோக்கு : நாமஜபம்
நான் விரும்பும் மணாளன் . . .
பெயர் : பூவராஹர்
குலம் : ரக்ஷிக்கும் குலம்
வயது : என்றும் இளமை
படிப்பு : சரணாகதி
ஊர் : திருவிடவெந்தை
தாயார் : சரஸ்வதி
தந்தை : ப்ரும்மதேவன்
குலத்தொழில் : கருணை
பொழுதுபோக்கு : பக்தருக்கு அருள்தல்
இவரை எனக்கு உடனே பேசி
மணமுடித்துத் தருவீராக . . .
எனக்குத் தகுதி இல்லையென்றாலும்,
உம்மால் இதைச் செய்யமுடியுமென்று
எனக்கும் தெரியும்;உமக்கும் தெரியும்...
சீக்கிரம் . . .
ஏற்கனவே பரகால நாயகி
இவருக்காக காத்திருக்கிறாள் . . .
அவளோடு சேர்த்து என்னையும்
இவரோடு திருமணம் செய்துவையும் . . .
இல்லையேல் . . .அடியாளை
பரகால நாயகிக்கு சீதன வெள்ளாட்டியாக
(அவளின் அந்தரங்க வேலைக்காரியாக)
தயவு செய்து தந்துவிடும் . . .
உமது அருளுக்காக அழும் . . .
உன்னடியாள் கோபாலவல்லி . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக