ஜகன் . . .
ராதேக்ருஷ்ணா
ஜகன் . . .
என் ஜகன் . . .
அவன் ஜகத்துக்கே நாதனாயினும்
எனக்கு அவன் ஜகனே . . .
ஜகந்நாதன் !
எனக்கு அவன் ஜகனேயாயினும்
அவன் ஜகந்நாதனே . . .
ஜகனைக் கண்டேன் . . .
ஜகத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
அகத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
துக்கத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
பாபத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
புண்ணியத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
குலத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
கோபத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
வலியை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
அவமானத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
புகழை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
கடந்த காலம் மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
எதிர் காலம் மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
ஆசாரத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
பயத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
வயதை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
பசியை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
கோபத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
கிழமை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
நேரத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
அசதியை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
அலங்காரத்தை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
உடலை மறந்தேன் !
ஜகனைக் கண்டேன் . . .
வேறு என்னவெல்லாம் மறந்தேன் !
ஜகனுக்குத்தான் தெரியும் . . .
ஜகனுக்கு மட்டுமே புரியும் !
புரீயை விட்டு உடல் வந்தாலும்,
மனம் என்னவோ ஜகனிடமே உள்ளது !
ஜகனைக் கண்டேன் , , ,
என் மனதை இழந்தேன் !
ஜகன் . . . ஜகன் . . . ஜகன் . . .
என்னை மறந்துவிடாதே !
நான் க்ருஷ்ண சைதன்யர் அல்ல !
நான் ஹரி தாஸ் யவன் அல்ல !
நான் ஜயதேவர் அல்ல !
நான் பத்மாவதி அல்ல !
நான் ஒரு சாதாரண உன் ரசிகை !
நான் ஒரு சாதாரண சம்சாரி !
நான் ஒரு சாதாரண ஜந்து !
ஜகன் . . . ஜகன் . . . ஜகன் . . .
உன் நினைவில் நானிருக்க
அதுவே நான் யாசிக்கும் வரம் !
என் நினைவில் நீயுண்டு . . .
உன் நினைவில் நானிருக்கிறேனா ?
இந்தக் கேள்வியே அபத்தமானது . . .
நீ என்னை நினைக்காமல்
நான் உன்னை நினைப்பேனா . . .
அதனால் நான் உன்னுள் . . .
நீ என்னுள் . . .
நம் இருவரும் சைதன்யருள் . . .
இப்படியே எப்போதும் இருப்போம் !
உனக்கு நானாச்சு . . .
எனக்கு நீயாச்சு . . .
நமக்கு ப்ரேம சுகமாச்சு . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக