கடைசி இரவாய் . . .
ராதேக்ருஷ்ணா
அற்புத இரவு !
சுகமாய் தூங்கப்போகிறேன் !
புரீ க்ஷேத்திரத்தில்
பலராமனின் கையைப் பிடித்துக்கொண்டு
சுகமாய் தூங்கப்போகிறேன் !
சுபத்ரா தேவியின்
தாலாட்டைக் கேட்டுக்கொண்டே
சுகமாய் தூங்கப்போகிறேன் !
அன்னதான பிரபு ஜகன்னாதனின்
மடியில் படுத்து
சுகமாய் தூங்கப்போகிறேன் !
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின்
திருவடியைக் கட்டிக்கொண்டு
சுகமாய் தூங்கப்போகிறேன் !
ஸ்ரீ ஹரி தாஸ் யவனின்
மிருதுவான சிரிப்பை ரசித்துக்கொண்டு
சுகமாய் தூங்கப்போகிறேன் !
ஸ்ரீ ஜயதேவரின் அஷ்டபதியை
கனவில் புலம்பிக்கொண்டு
சுகமாய் தூங்கப்போகிறேன் !
நீலாசலமான புரீ க்ஷேத்திரத்தில்
சலனமில்லாமல் சமத்தாய்
சுகமாய் தூங்கப்போகிறேன் !
இதுவே நான் தூங்கும்
கடைசி இரவாய் இருக்கக்கூடாதா ? ! ?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக