குரு பூர்ணிமா . . .
ராதேக்ருஷ்ணா
குரு மந்திரவாதியல்ல . . .
குரு... மந்திர உபதேசம் செய்யும்
க்ருஷ்ணனின் தாசன் . . .
குரு . . . தந்திரக்காரரல்ல . . .
குரு...உனது மனத்தை
சரிசெய்யும் நல்லவர் . . .
குரு . . . அதிசயங்கள் செய்பவரல்ல . . .
குரு . . .உனக்கு யதார்த்தத்தைப்
புரியவைக்கும் உன் நலம்விரும்பி . . .
குரு . . . குபேரரர் அல்ல . . .
குரு . . . உனக்கு நீங்காத தனமான
க்ருஷ்ணனைக் காட்டிக் கொடுப்பவர் . . .
குரு . . . உன் ஆசைகளை பூர்த்தி
செய்துவைப்பவரல்ல . . .
குரு . . . உன்னை க்ருஷ்ணனின்
இஷடப்படி மாற்றுபவர் . . .
குரு . . . நீ சொல்வதைக் கேட்பவரல்ல . . .
குரு . . . உன்னை க்ருஷ்ணன்
சொல்படி ஆடவைப்பவர் . . .
குரு . . . உனது இச்சைகளை
தீர்த்து வைப்பவரல்ல . . .
குரு . . . உன் ஆசைகளை
சரியான வழியில் திருப்புபவர் . . .
குரு . . . உன் கல்வியையோ,
தனத்தையோ,அழகையோ,
பதவியையோ,குலத்தையோ,
கொண்டாடுபவரல்ல . . .
குரு . . . உன் மனதில் உள்ள
பக்தியை மட்டுமே ரசிப்பவர் . . .
குரு . . . உன் மூலமாக
தன் காரியங்களை சாதிப்பவரல்ல . . .
குரு . . . தன் மூலமாக
உனக்கு ஒத்தாசை செய்பவர் . . .
குரு . . . உன்னை தன் சுகத்துக்காக
உபயோகப்படுத்துபவர் அல்ல . . .
குரு . . . தன்னைக் கொடுத்து
உன்னைக் காப்பாற்றுபவர் . . .
குரு . . . நீ அவரைப் பிடித்துவைக்கவில்லை !
குரு . . . அவர்தான் உன்னை இன்று வரை
தன் அன்புப் பிடியில் வைத்திருக்கிறார் . . .
குரு . . . மனித உருவம் . . .
குரு . . . கடவுளின் கருணை . . .
குரு . . . அன்பின் அர்த்தம் . . .
குரு . . . பொதுநலச் சின்னம் . . .
குரு . . . ஏற்றும் ஏணி . . .
குரு . . . தாங்கும் தாய் . . .
இந்த குரு பூர்ணிமாவில்
உனது குருவை நீ புரிந்து கொண்டால்
அதுவே உன் குருவிற்கு
நீ செய்யும் மரியாதை . . .
இனியாவது குருவை
உள்ளபடி புரிந்துகொள் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக