ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 ஜூலை, 2012

கண்ணுறங்கு . . . கண்ணுறங்கு . . .

ராதேக்ருஷ்ணா
 
 
கண்ணுறங்கு செல்லமே கண்ணுறங்கு !
ஜகந்நாதா ... இந்த அத்தை மடியில் சுகமாய் கண்ணுறங்கு !
 
 
 
கண்ணுறங்கு சமத்தே கண்ணுறங்கு !
பலதேவா ...என் தாலாட்டில் நிம்மதியாய் கண்ணுறங்கு !
 
 
 
கண்ணுறங்கு ராஜாத்தி கண்ணுறங்கு !
சுபத்ரா தேவியே ...என் மார்பில் ஆனந்தமாய் கண்ணுறங்கு !
 
 
 
அத்தை  நானிருக்கேன் !
அழகாய் பார்த்துக்கொள்வேன் ! 
 
 
 
 ஜகத்தை அத்தை காப்பேன் !
ஜகந்நாதா ! அழகாய் கண்ணுறங்கு !



ஜகந்நாதனை அத்தை காப்பேன் !
பலதேவா ! பயமின்றி கண்ணுறங்கு !
 
 
உன்னுடனே அத்தையுண்டு !
உன் அண்ணன்மார் இருவருமுண்டு !
 சுபத்ரா பட்டுகுட்டி ! ஜோராய் கண்ணுறங்கு !
 
 
 
வசுதேவ அண்ணா !
குழந்தைகள் தூங்குகின்றார் . . .
சுகமாய் நீ தூங்கு !
 
 
 
தேவகி அண்ணி !
செல்லங்கள் . . தூங்குகின்றார் . . .
நீயும் போய் தூங்கம்மா ! 
 
 
சரஸ்வதி . . .
குழந்தைகள் தூங்குகின்றார் . . .
வீணை வாசிக்காதே !
 
 
பார்வதி . . .
குழந்தைகள் தூங்குகின்றார் . . .
அதிர்ந்து பேசாதே !


ப்ரும்மதேவா . . .
குழந்தைகள் தூங்குகின்றார் . . .
எதுவும் ஜபிக்காதே !
 
 
பரமசிவா !
குழந்தைகள் தூங்குகின்றார் . . .
தாண்டவம் ஆடாதே ! 
 
 
இந்திரா !
குழந்தைகள் தூங்குகின்றார் . . .
இப்போது புலம்பாதே ! 
 
 
ஆதிசேஷா !
குழந்தைகள் தூங்குகின்றார் . . .
வேகமாய் மூச்சுவிடாதே !
 
 
கருடா !
குழந்தைகள் தூங்குகின்றார் . . .
சிறகால் சாமரம் வீசு ! 
 
 
ராமானுஜா !
குழந்தைகள் தூங்குகின்றார் . . . 
போர்வை போர்த்திவிடு ! 
 
 
க்ருஷ்ண சைதன்யா !
குழந்தைகள் தூங்குகின்றார் . . .
  திருஷ்டி சுத்திப் போடு !
 
 
நித்ரா தேவி !
குழந்தைகள் தூங்குகின்றார் . . .
வாசலில் காவலிரு ! 
 
 
தாலேலோ தாலேலோ !
ஜகந்நாதா தாலேலோ . . .
 
 
தாலேலோ தாலேலோ !
பலதேவா  தாலேலோ . . .
 
 
தாலேலோ தாலேலோ !
சுபத்ரா தேவி  தாலேலோ . . .
 
 
அத்தை  நானிருக்கேன் !
அழகாய் பார்த்துக்கொள்வேன் !
ஜகந்நாதா ! அழகாய் கண்ணுறங்கு !
 
 
கண்ணுறங்கு . . . கண்ணுறங்கு . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP