ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 ஜூலை, 2012

ரமணா . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 
ரமணா . . .
 
 
தேஹத்தை ஆத்மாவென்று
மயங்கிக்கிடக்கும் கலியுகத்தில்
தான் ஆத்மா என்று
உணர்ந்தவனே...உணர்த்தியவனே !
ரமணா . . .
 
 
 
 தேஹத்தை பாதுகாக்க,தேஹத்தை
சுகப்படுத்த பாடுபடும் சம்சாரிகளுக்கு
நடுவில், தேஹத்தை மறந்து
தியானத்தில் இருந்தவனே !
ரமணா . . .
 
 
 
தன்னிஷ்டப்படி கடவுள்
வரம் தர ப்ரார்த்திக்கும் உலகில்,
உன்னிஷ்டம் என்னிஷ்டம்
என்று சரணாகதி செய்தவனே !
ரமணா . . .
 
 
 
வித விதமாய் பேசி தத்துவத்தைப்
போதித்து தன்னைப் பெருமைப்படுத்தும்
போலி ஆசார்யர்களின் நடுவில்,
பேசாமல் உபதேசம் செய்தவனே !
ரமணா . . .
 
 
 
மனிதருக்கே மோக்ஷம் கஷ்டம்
என்னும் காலத்தில்,காக்கைக்கும்,
மானுக்கும்,பசுவுக்கும் மோக்ஷம்
தந்த கருணா ரூபனே !
ரமணா . . .
 
 
 
சம்சாரத்தில் ஸ்ரமப்படும் கூட்டத்திற்காக,
தன்னை ஸ்ரமப்படுத்திக்கொண்டு,
எல்லோருக்கும் விஸ்ராந்தி தர
ரமணாஸ்ரமம் தந்த உத்தமனே !
ரமணா . . .
 
 
 
குருவென்றால் உபதேசிக்க மட்டுமே
என்பதை மாற்றி பக்தருக்காக
மாவையும் அரைத்த சிறியவனே !
ஆனால் உலகம் போற்றும் பெரியோனே !
ரமணா . . .
 
 
 
ஜோதி ரூபனான அருணாசலேஸ்வரருக்கும்,
கார் முகிலாய் அன்பு மழையாய்
குளிர்ச்சி தந்த வினோதக் குழந்தையே !
எங்களையும் குழந்தையாக்கியவனே !
ரமணா . . .
 
 
 
நானும் வந்தேன் உன் ரமணாஸ்ரமத்திற்கு,
என் ஸ்ரமும் தீர்த்தாய் ரமணா . . .
 
 
என் சம்சார ஸ்ரமம் தீர்ந்தது . . .
என் காம ஸ்ரமம் தீர்ந்தது . . .
என் உடல் ஸ்ரமம் தீர்ந்தது . . .
என் அஞ்ஞான ஸ்ரமம் தீர்ந்தது . . .




ஆஷாட சுக்ல ஏகாதசிக்கு
பண்டரீபுரம் செல்லாத ஸ்ரமத்தை
தீர்த்த ரமணா . . .
 
 
ஸ்ரமம் தீர்த்த ரமணா . . .
நீயே யாவருக்கும் ஆஸ்ரமம் . . .
 



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP