ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, July 23, 2012

நான் அறியேன் . . .

ராதேக்ருஷ்ணா



திருவனந்தபுரத்தில்
இருக்கிறேன் . . .



எல்லா இடர்களையும்
கெடுக்கும் பத்மநாபனின்
அந்தப்புரத்தில் இருக்கிறேன் !



இன்று போய் புகுவாய்
என்று நம்மாழ்வார் சொன்ன
அனந்தபுரியில் இருக்கிறேன் !



பாகவத ப்ரியனான
பத்மநாபன் படுத்திருக்கும்
ஸ்யானந்தூரத்தில் இருக்கிறேன் !



விண்ணோர் அகப்பணி செய்து
அனந்தனின் அருளுக்காக ஏங்கும்
அனந்தபுரத்தில் இருக்கிறேன் !



ஆராட்டு நாயகனின், வேட்டைக்காரனின்
விந்தையான திருவனந்தபுரத்தில்
சுகமாய் இருக்கிறேன் !






ராமானுஜரை இரவோடு இரவாக
திருக்குறுங்குடியில் கொண்டு விட்ட
திருடனின் புரத்தில் இருக்கிறேன் !






ஒன்றரை லக்ஷம் கோடி கொண்ட,
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகனின் அருகில் இருக்கின்றேன் !






த்வாரகையிலிருந்து ஓடி வந்து,
அனந்தன் காட்டில் ஒளிந்திருக்கும்
மாயனின் ஊரில் இருக்கிறேன் !






பதினெட்டு மைல் த்ரிவிக்ரமன்,
பதினெட்டு அடியாய் சுருங்கி வாமனான
உத்தமனின் புரியில் இருக்கிறேன் !






கண்ணும்,கையும்,காலும் தாமரையான,
கையில் தாமரையோடு சயனிக்கும்
தாமரையாள் கேள்வனோடு இருக்கிறேன் !



இன்னும் எத்தனை நாள்
பத்மநாபன் என்னை இங்கே
வைத்திருப்பானோ ?
அவனே அறிவான் . . .
நான் அறியேன் . . .






திரு அனந்த புரம் . . .
திருவுக்கும் அந்தப்புரம் . . .
அனந்தனுக்கும் அந்தப்புரம் . . .
பத்மத்திற்கும் அந்தப்புரம் . . .
பத்மநாபனுக்கும் அந்தப்புரம் . . .



இந்த கோபாலவல்லிக்கு ஆனந்தபுரம் . . .





0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP